Looking for Part Time/ Full Time/ Home Based Jobs? Call us : 76676 44558 Or Send ur Resumes : lilofee.international@gmail.com

Dont Worry Be Happy!

ஆரோக்கியமான வாழ்வு

 
உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி ( பிரச்சினை உள்ள ஆண்களுக்கு குழந்தை வரம் உண்டாக )

உடலில் ஏற்படும் சூட்டை வெறும் 2 நிமிடத்தில் போக்கும் ரகசிய மற்றும் சக்தி வாய்ந்த எளிய வழி (குழந்தை பிறக்க)
தற்போது நிலவி வரும் பருவ நிலா மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம்(வெப்பம்) ஏற்படுகிறது, இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது, இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது, இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வாயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் நிகழ்வுகள் நிகழ்கிறது, இதனை சரி செய்ய நம் சித்த பெருமைக்க அன்றைய காலகட்டத்திலேயே ஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை உங்களுக்காக கொடுக்கிறோம்

தேவையான பொருள்கள் :
1.நல்லெண்ணெய்
2.பூண்டு
3.மிளகு


செய்முறை:
நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும், எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறினதும் எண்ணையை காலின்(இரு கால்) பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும், 2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும், இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும், 2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது, சளி ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம், மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள். இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும்.

அந்த காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம். ஏனெனில் இதனை செய்வதன் மூலம் ஆண்களின் விந்து விருத்தி அடைந்து மூன்று மாதத்தில் குழந்தை பிறக்குமாம், இதனை IT (18 வயதுக்கு மேல்) துறையில் வேலை செய்பவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் 1 நிமிடத்திற்கு எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும். மேலும் சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை இதனை செய்யலாம்.
நண்பர்களே இந்த செய்தியை நீங்கள் படித்தது மட்டுமின்றி மற்ற (குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்க பட்டவர்களும்) பயன் பெற இந்த செய்தியை பகிர்ந்து மகிழுங்கள்.

உலகையே திரும்பி பார்க்க வைத்து சாதித்த பெண்..!


 
உலகை பார்க்காமல் உலகையே திரும்பி பார்க்க வைத்து சாதித்த பெண்ணை உளமார பாராட்டுவோம் !!!

அமெரிக்காவில் உள்ள ஐநா சபையில் ஒருவர் ஒரு முறை பேசினாலே வாழ்க்கையில் பாக்கியம் பெற்றவர் ஆவார் ஆனால் பார்வையற்ற சென்னை மாணவி சுவர்ணலட்சுமி ஒரு முறைக்கு இரு முறை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஐநாவில் பேசியுள்ளார் அவர் யார் என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறதா...

சென்னை கனரா பாங்கின் நிறுவனர் நாள் விழாவினை முன்னிட்டு சாதனை புரிந்த மாணவ, மாணவியருக்கான பாராட்டு விழா ப்ரீடம் ட்ரஸ்ட் டாக்டர் சுந்தர் தலைமையில் நடைபெற்றது.
மேடைக்கு அழைக்கப்பட்டவர்களில் சுவர்ணலட்சுமி பலரது கருத்தையும் கவர்ந்தார்.

சென்னை பெருங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த ரவிதுரைக்கண்ணு- லட்சுமி தேவி தம்பதியின் ஒரே மகள் சுவர்ணலட்சுமி.
சுவர்ணலட்சுமிக்கு பிறவியிலே கண்பார்வை இல்லை. இவருக்கு பார்வைவேண்டி பலவித முயற்சிகள் எடுத்த பெற்றோர் அந்த முயற்சிகள் தந்த தோல்வியினால் துவண்டு போகவில்லை, காரணம் தாங்கள் துவண்டு போனால் அது தங்களது மகளை பாதிக்கும் என்பதால் மகளின் விருப்பம், அவரது முன்னேற்றத்திற்காக தங்களது வாழ்க்கை ஒதுக்கவும், சுவர்ணலட்சுமியின் வளர்ச்சியை செதுக்கவும் செய்தனர்.
சுவர்ணலட்சுமி சென்னையில் உள்ள பார்வையற்றோருக்கான லிட்டில் பிளவர் கான்வெண்ட் மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து பிரமாதமாக படித்து வருகிறார் தற்போது அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார்
பாட்டு பாடுவது, கீபோர்டு வாசிப்பது, நீந்துவது, செஸ் விளையாடுவது என்று எதையும் விட்டு விடாமல் எதிலும் சோடை போகாமல் வளர்ந்து வந்த சுவர்ணலட்சுமிக்கு பள்ளியில் செயல்பட்டு வரும் குழந்தைகள் பார்லிமெண்ட் அமைப்பின் தகவல் தொடர்புதுறை அமைச்சர் பதவி கிடைத்தது.


இந்த இடத்தில் குழந்தைகள் பாராளுமன்றம் பற்றி ஒரு சில வார்த்தை
இந்தியாவின் பல மாநிலங்களில் குழந்தைகளை மட்டுமேவைத்து அமைக்கப்பட்டதுதான் இந்த குழந்தைகள் பாராளுமன்றம். தமிழகத்தில் எட்வின் என்பவரால் 1993ல் நாகர்கோவிலில் தொடங்கப்பட்டு, சிறப்பாக இயங்கி வருகிறது. தமிழகத்தில் மட்டும் 15,000 குழந்தைகள் பாராளுமன்றங்கள் உள்ளன. சமூக ஆர்வலர்களின் மூலம் நடத்தப்படும் இந்தப் பாராளுமன்றங்களில் பிரதமர் மற்றும் பிற அமைச்சர்கள் வரை அனைவரும் பள்ளி மாணவர்களே, இதன் ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சூரியசந்திரன்.

குழந்தை திருமணம், பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிள்ளைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது, தங்களது பிரச்னைகளைத் தாங்களே பேசித் தீர்வுகாண்பது என இந்தப் பாராளுமன்றங்களின் பணிகள் மகத்தானவை. இதன் மூலம் மாணவர்கள், தங்களது பள்ளிப் பருவத்திலேயே தன்னம்பிக்கையையும் ஆளுமைப் பண்பையும் வளர்த்துக் கொள்ள முடிகிறது.

இந்த பாராளுமன்றத்தில் வெட்டி பேச்சு கிடையாது, வேட்டி கிழியும் அபாயமும் கிடையாது, வெளிநடப்பும் கிடையாது எல்லா பேச்சும் அளவானவை, ஆரோக்கியமானவை, குழந்தைகள் உரிமையை நிலைநாட்டுபவை, அவர்களது வளர்ச்சிக்கு வழிகாணுபவை.
ஒவ்வொரு பாராளுமன்றத்திலும் தேர்தல் மூலமாக அமைச்சர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு அந்தந்தப் பகுதிகளில் தேர்வு செய்யப்படும் அமைச்சர்கள் அடங்கிய பாராளுமன்றங்களின் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடக்கும். அதில் சிறப்பாகப் பேசியவர்கள், செயல்பட்டவர்கள் மாநில அளவிலான பாராளுமன்றத்திற்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.

தகவல் தொடர்பு அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட சுவர்ணலட்சுமிக்கு இயல்பாகவே சமூக சேவை எண்ணம் உண்டு. இதன் காரணமாக கடலூரில் தானே புயல் தாக்குதல் சம்பவத்தை கேள்விப்பட்டு 30 ஆயிரம் ரூபாயை சேகரித்து நேரடியாக சம்பவ இடத்திற்கு போய் பாதிக்கப்பட்ட மக்களிடம் அந்த நிதியை வழங்கினார்.

அதன்பிறகு அனைவருக்கும் தொண்டு செய்யும் எண்ணம் வரவேண்டும் என்பதற்காக ஒருவருக்கு ஒரு ரூபாய் என்ற திட்டத்தை கொண்டு வந்து அந்த ஒரு ரூபாயும் பள்ளி குழந்தைகள்தான் தரவேண்டும் என்று சொல்லி ஏழாயிரம் ரூபாயை ஏழாயிரம் பேரிடம் இருந்து வசூல் செய்தார். இந்த பணத்தை கொண்டு இரண்டு குழந்தைகளின் படிப்பு கட்டணத்தை கட்டியதுடன் சிலருக்கு சீருடையும் வாங்கிக் கொடுத்தார்.
இந்த நிலையில் அடுத்து நடந்த பாராளுமன்ற கூட்டத்தில் சுவர்ணலட்சுமி நிதி அமைச்சராக தேர்வானார் இவரது பேச்சு செயல்பாடு காரணமாக அடுத்து நடந்த மாநில அளவிலான கூட்டத்தில் குழந்தைகள் பாராளுமன்ற பிரதமராக தேர்வானார்.

இந்த நிலையில் ஐநாவின் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் நலன் பற்றி பேச அனுமதிக்கப்பட்டார், இவரது சிறப்பான பேச்சு காரணமாக அமெரிக்கா போய் திரும்பி சில மாதங்களிலேயே திரும்பவும் ஐநா அழைக்கப்பட்டு மீண்டும் போய் பேசிவிட்டு வந்தார்.

இப்படி ஒரு முறைக்கு இருமுறை ஐநா போய்வந்த சுவர்ணலட்சுமிக்கு இங்குள்ள பல்வேறு அமைப்புகள் பாராட்டு விழா நடத்திவருகின்றன.
ஆரம்பத்தில் என்னிடம் பல விஷயங்களில் பயம், தயக்கம், பார்வை இல்லையே என்கிற வருத்தம் இருந்தது. சில்ரன்'ஸ் பார்லிமென்டில் சேர்ந்த பிறகு, தைரியமும் தன்னம்பிக்கையும் வளர்ந்தன. 'எந்தச் செயலையும் பளுவாக நினைக்காமல், புதிய கண்ணோட்டத்துடன் அணுகினால் ஜெயிக்கலாம்' என்பதைக் கற்றுக் கொண்டேன். ஒவ்வொரு பாராளுமன்றக் கூட்டத்தின் போதும் எந்த மாதிரியான பிரச்னைகள் விவாதத்துக்கு வரும், அதற்கு எப்படிப் பட்ட தீர்வைச் சொன்னால் சரியாக இருக்கும்னு ஒரு முன் தயாரிப்போடு இருப்பேன்.

இந்த திட்டமிட்ட உழைப்பு என்னை தற்போது இந்த உயரத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த பாராட்டுக்கள் என்னை இன்னும் சமூகத்திற்கு உழைக்க தூண்டுகிறது. எதிர்காலத்தில் மாவட்ட ஆட்சித் தலைவராகி இன்னும் நிறைய உழைக்க என்னை நான் தயார் செய்து கொண்டு வருகிறேன். நம்மை வாழவிடாமல் தடுப்பதற்கு நாட்டில் ஆயிரம் காரணங்கள் இருக்கும் ஆனால் வாழவைக்க ஏதேனும் ஒரு காரணம் இருக்கும் அந்த காரணத்தை பிடித்துக்கொண்டு நாமும் வளர வேண்டும், நம்மைச் சார்ந்தவர்களையும் வளர்க்க வேண்டும். பயமும், தயக்கமும்தான் நமது லட்சியப் பயணத்திற்கான தடைக்கற்கள் முதலில் அந்த தடைக்கற்களை தகர்த்து எறியுங்கள் என்று முழங்கும் சுவர்ணலட்சுமியை வாழ்த்த விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9025241999. (சுவர்ணலட்சுமி பள்ளிக்கு போயிருந்தால் அவரது தாயார் லட்சுமிதேவி பேசுவார்)


Tamil Motivational Free Meeting & Training @ Madurai

 For Free Entry Booking: 
Pls Call.. Vijay
 +91 76676 44558

Tamil Motivational Free Meeting & Training @ Vriddhachalam

    
  Vriddhachalam
 For Free Entry Booking: 
Pls Call.. Vijay
 +91 76676 44558




Tamil Motivational Free Meeting & Training @ Pondy

 Pondycherry
 For Free Entry Booking: 
Pls Call.. Vijay
 +91 76676 44558

tamil-motivational Free Meeting & Training @ Parrys, Chennai Tamilnadu

 





More Details for free Booking தொலைபேசி: +91 76676 44558

Tamil Motivational Video


tamil-motivational Free Meeting & Training @ POONAMALLE, Chennai Tamilnadu

பிரபஞ்ச சக்தி எனும் பூதம்


ஆலாவுடீன்கள் நீங்களே....
சிறுவயதுகளில் கண்டிப்பாக நீங்கள் அலாவுடீனுடைய கதையினை கேட்டிருப்பீர்கள், அல்லது சித்திரக்காட்சியாக பார்த்திருப்பீர்கள்.
அந்தக்கதையினில் அலாவுடீனுக்கு தற்செயலாக கிடைக்கும் ஒரு விளக்கின் மூலம் அதை விளக்கும்போது பெரிய பூதம் ஒன்று அதிலிருந்து தோன்றி, அலாவுடீன் கேட்ட அத்தனையினையும் அவனுக்கு வழங்குவதாக அந்தக்கதை அமைந்திருக்கும்.



நீங்கள் என்னவாக ஆகவேண்டும், எப்படி இருக்கவேண்டும், என்ன என்ன உங்களுக்கு மகிழ்ச்சியை தருவிப்பனவாக இருக்கக்கூடும், என்னவெல்லாம் இருந்தால் நீங்கள் அதியுச்ச மகிழ்ச்சியாக இருப்பீர்கள், வாழ்வில் வெற்றி பெற்ற நபராக நீங்கள் தெரிய, உங்கள் வாழ்வை வளமாக்கித்தர என உங்களுக்கும் குற்றேவல் செய்ய மிகச்சக்திவாய்ந்த ஒருபூதம் காத்துக்கிடக்கின்றது. ஆனால் வாழ்வில் 99 வீதத்தினர் அந்த பூதத்தை தருவிக்கும் விளக்கு எங்கே இருக்கின்றது என்பதை தேடித்தேடியே இறந்துவிடுகின்றனர்.


உலக வாழ்வியலில் 1 சதவீதத்தினரே அந்த சக்திமிக்க பூதத்தை வெளிவரச்செய்யும் விளக்கை கண்டுபிடித்து அதை துலக்கி உலகின் உன்னத நிலைகளுக்கு சென்றுள்ளனர். ஆவர்களே வாழும்போதும் மட்டுமல்லாது அவர்களின் மறைவுக்குப்பின்னரும் உலகத்தாரால் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.


உண்மையில் இந்த பிரபஞ்சம் பல இரகசியங்களை எமக்குத்தெரியாமல் ஒழித்தே வைத்துள்ளது. இந்த இரகசியங்களை ஒரு வீதத்திற்காவது கண்டு கொண்டவர்கள் அந்தப்பிரபஞ்சத்திடமிருந்து பல சக்திகளை பெற்றுக்கொண்டதாக மதங்கள் கூட சொல்கின்றன.


சரி.... உங்கள் ஆசைகளை நிறைவேற்றித்தரும் அந்த சக்திமிக்க பூதத்தை அடைய நீங்கள் துலக்க வேண்டிய விளக்கு எது தெரியுமா? உங்கள் மனம்தான் அந்த விளக்கு.


ஆம்... மனோசக்தியால் முடியாதது எதுமே கிடையாது என்பது நிரூபிக்கப்பட்ட பேருண்மை. ஆம் உங்கள் மனங்களை ஒருமுகப்படுத்தி உங்கள் தேவைகளை மனதில் திடமாக துலக்க துலக்க இந்தப்பிரபஞ்ச சக்தி எனும் பூதம் கண்டிப்பாக நீங்கள் கேட்பவைகள் அனைத்தையும் தர தயாராக இருக்கின்றது. 


கேட்பதற்குத்தான் ஆட்கள் இல்லாமல் இருக்கின்றது.

மனதைக் கவர்ந்த ஆட்டோ வாசகங்கள்?''

 


''மனதைக் கவர்ந்த ஆட்டோ வாசகங்கள்?''

''இதோ...

* உலக எண்ணிக்கையில் ஒருவனாக இருப்பதைவிட, உலகமே உன்னை எண்ணும் அளவுக்கு இரு!

* முதுகுக்குப் பின்னால் ஒரே ஒரு காரியம் மட்டும் செய்யலாம். அது அடுத்தவரின் முதுகைத் தட்டிக்கொடுப்பதுதான்.

* கொஞ்சம் வைத்திருப்பவன் ஏழை அல்ல; அதிகமாக ஆசைப்படுபவனே ஏழை!

* உங்கள் கௌரவம் வேறு எங்கும் இல்லை; உங்கள் நாக்கு நுனியில்தான் இருக்கிறது!'

* கடவுளின் பெயரை உச்சரிக்கும் உதடுகளைக் காட்டிலும், ஓர் ஏழைக்கு உதவும் கைகளே புனிதமானவை!

* கதவைத் தட்டாதவர்கள் எத்தனையோ வாய்ப்புகளை இழந்திருக்கிறார்கள்!

* இந்தியாவுக்கு இப்போதுள்ள முக்கியமான பிரச்னையே மக்கள்தொகை பெருக்கம்தான். எனவே, இந்த ஆட்டோவில் பிரசவத்துக்கு இலவசம் இல்லை. மீட்டர் தொகைக்கு மேல் 50 ரூபாய் வசூலிக்கப்படும்!

எப்பூடி!''

- மூ.சித்திரக்குமரன், சென்னை.
நானே கேள்வி... நானே பதில்!

ஆக்ஸிலரேட்டர் மாட்டிக் கொண்டால்...


ஆக்ஸிலரேட்டர் பெடலில் இருந்து நீங்கள் காலை எடுத்த பிறகும் கார் அதே வேகத்தில் சென்றாலோ, அல்லது இன்னும் வேகமாகச் சென்றாலோ ஆக்ஸிலரேட்டர் பெடல் ஸ்டக் ஆகிவிட்டது என்று அர்த்தம். கிளட்ச்சை அழுத்தி கியர்களை படிப்படியாகக் குறையுங்கள். ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் கொண்ட கார் என்றால், கியரை நியூட்ரலுக்குக் கொண்டு வாருங்கள். வீல்களை லாக் செய்யாமல், பிரேக்கை நன்றாக அழுத்துங்கள். அப்படியே சாலையின் ஓரத்துக்கு வந்து விடுங்கள். காரை நிறுத்திய பிறகு இன்ஜினை ஆஃப் செய்யுங்கள்.


[மோட்டார் விகடன் - ஜனவரி 2012 இதழில் இருந்து]